8-ஆம் வகுப்பு படித்த கணவன்.. எம்.டெக் முடித்த மனைவி: ஈகோவால் நடந்த விபரீதம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் கணவன் மற்றும் மனைவிக்கு இடையே நடந்த ஈகோ பிரச்சனையால், மனைவி உயிரைவிட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி, இவருக்கும் அரியலூரைச் சேர்ந்த ஜனனி என்பவருக்கும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டுத் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு அக்‌ஷய் கவுதம்(3), ரிதன்யா(1) என்று இரண்டு குழந்தைகள் உள்ளனரர்.

இந்நிலையில் கடந்த 6-ஆம் திகதி கணபதி தனது மனைவி ஜனனி தூக்கில் தொங்கிவிட்டதாக கூறி, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் அங்கு ஜனனியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கன்வே இறந்துவிட்டதாகவும், இதனால் பிரேத பரிசோதனைக்கு திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி கூறியுள்ளனர்.

ஆனால் கணபதியோ அதை செய்யாமல், தனது சொந்த ஊரான திருமானூர் பகுதிக்கு கொண்டு சென்று உடலை எரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளார்.

இது குறித்து தகவல் பொலிசாருக்கு தெரியவந்தால், ஜனனியின் உடலை எரிப்பதற்குள் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர். பொலிசார் வருவதை அறிந்த கணபதி அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜனனியின் தந்தை தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி பொலிசில் புகார் அளித்துள்ளார்.

அப்போது அவர், ஜனனிக்கு 60 பவுன் நகையும் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருள்களும் கொடுத்தேன்.

கூடுதல் வரதட்சணைக் கேட்டு கணபதி மற்றும் அவருடைய குடும்பத்தினர்தான் என் மகளைக் கொலை செய்திருக்கலாம் என்று தெரிவித்தார்.

அதன் பின் பொலிசார் நடத்திய விசாரணையில், கணபதி 8-ம் வகுப்புவரை படித்துள்ளார். ஜனனி எம்.டெக் முடித்துள்ளார்.

ஜனனியின் பெற்றோரோ மாப்பிள்ளை ரியல் எஸ்டேட் தொழிலில் செய்து வருகிறார் செல்வாக்கு மிகுந்தவராகவும் இருக்கிறார் என்று கூறி பெண் கொடுத்துள்ளனர்.

திருமணம் முடிந்த பின்னர் இருவருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது. பிரச்சனைக்கு முக்கிய காரணாமே ஜனனி அவரின் பெற்றோர் வீட்டுக்கு செல்வது, அப்படிப் போவதால், குடும்பத்துக்குள் சண்டை வலுத்து வருவதாக நினைத்த கணபதி, தனது மனைவியை அவரின் சொந்த ஊருக்குச் செல்லக்கூடாது என்று அடிக்கடி கூறியுள்ளார்.

இதே போன்று ஒரு முறை சண்டை வந்துள்ளது. அப்போது கணபதி வீட்டிற்கு போகக்கூடாது என்று சொல்ல, அதற்கு ஜனனி இப்படியே செய்தால் நான் இறந்துவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இதை பொருட்படுத்தாமல் கணபதி வேலை விவகாரம் தொடர்பாக வெளியில் சென்றுள்ளார்.

அப்போது திரும்பி வந்து பார்த்தபோது ஜனனி, தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார், இருவருக்குள்ளும் இருந்த ஈகோ பிரச்னையே அனைத்திற்கும் காரணம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்