மீண்டும் உயிர் பெறுவான்: இறந்த மகனின் உடலுடன் 11 நாட்கள் ஜெபம் செய்த தந்தை

Report Print Raju Raju in இந்தியா
499Shares

உயிரிழந்த மகன் மீண்டும் உயிர் பெறுவான் என கருதி அவரின் உடலை வைத்து 11 நாட்கள் ஜெபம் செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையின் நாக்பாடாவில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது.

அங்கு வசித்து வந்த மிஷக் நவீஸ் (17) என்பவர் புற்றுநோயால் கடந்த மாதம் 26-ஆம் திகதி உயிரிழந்தார்.

இயேசுநாதரின் அருளால் மிஷக் திரும்ப உயிர் பெறுவான் என நம்பிய அவரின் தந்தை ஓட்டாவியா, மிஷக்கின் சடலத்தை பதப்படுத்தி நாக்பாடா காவல் நிலையத்திற்கு எதிரில் இருக்கும் சர்ச்சில் வைத்து தினமும் ஜெபம் செய்து வந்தார்.

இப்படி ஒரு வாரத்துக்கு மேலாக செய்து வந்த நிலையில் இந்த விவகாரம் காவல் நிலையத்துக்கு சென்றது.

பொலிசார் தலையிட்டு மிஷக் உடலுக்கு இறுதிசடங்கு செய்யுமாறு ஓட்டாவியாவிடம் கூறினர்.

தனது உறவினர்கள் வந்தவுடன் இறுதிசடங்கு செய்வேன் என கூறிய ஓட்டாவியா, மிஷிக்கின் சடலத்தை அங்கிருந்து வேறு இடத்திலிருக்கும் சர்ச்சுக்கு கொண்டு சென்று ஜபம் செய்துள்ளார்.

இது குறித்து அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவல் போக பொலிசார் ஓட்டாவியாவை எச்சரித்தனர்.

இதையடுத்து மகன் இறந்து 11 நாட்கள் கழித்து நேற்று அவரின் உடலை ஓட்டாவியா அடக்கம் செய்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்