என்னை பற்றிய குறைகளையும் மக்கள் கூறலாம்: செயலியை அறிமுகப்படுத்தி கமல் பேச்சு

Report Print Raju Raju in இந்தியா
74Shares

புதிய செயலியை அறிமுகப்படுத்திய கமல்ஹாசன் அதன் மூலம் தன்னை பற்றிய குறைபாடுகள் இருந்தாலும் கூறலாம் என தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசனுக்கு நேற்று 63-வது பிறந்தநாளாகும். பிறந்தநாளை முன்னிட்டு சென்னை தி.நகரில் அவர் நற்பணி மன்றம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது.

இதில் புதிய செயலியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி பேசினார். அவர் கூறுகையில், மக்கள் பிரச்சனையை தெரிந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன்.

நிறைய விடயங்களை கற்றுக்கொள்வதற்காக தான் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளேன்.

தமிழகத்தை இயக்க வேண்டிய சக்கரங்கள் தற்போது பழுதடைந்துள்ளது, பழுதை சரிசெய்ய மக்கள் ஒன்று திரள வேண்டும்

நல்ல தமிழ்நாட்டை உருவாக்குவது என் கனவு, நல்லது செய்வதை பண்பறிந்து ஜாக்கிரதையாக செய்ய வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

அரசியல் பயணத்திற்கு நிறைய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது எனவும் அதற்கான அஸ்திவாரத்தை வலுவாக அமைக்க வேண்டிய பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

தவறான வழியில் வரும் பணத்தை என் நிறுவனத்திற்குள்ளே நான் அனுமதிப்பதில்லை, நான் ஆரம்பிக்கும் கட்சியிலும் அனுமதிக்க மாட்டேன், எனது கட்சிக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.

இந்து விரோதி என்றே என்னை சித்தரிக்கிறார்கள் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

இதையடுத்து Maiamwhistle என்ற செயலியை அவர் அறிமுகப்படுத்தினார். நியாயத்திற்காக குரல் எழுப்பும் கருவி Maiamwhistle என கூறிய கமல்

இந்த செயலியின் மூலம் தன்னை பற்றிய குறைபாடுகள் இருந்தால் கூட தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.

மேலும், மக்களை பிரச்சனையை பற்றி பேச #theditheerpomvaa #maiamwhistle #virtuouscycles என்ற ஹேஷ்டேக்குகளையும் அவர் அறிமுகப்படுத்தினார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்