கொல்கத்தா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: அவசரமாக தரையிறங்கியதால் பரபரப்பு

Report Print Arbin Arbin in இந்தியா
53Shares

இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து கொல்கத்த சென்ற விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக எழுந்த தகவலை அடுத்து விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லி கொல்கத்தா GoAir விமானத்திலேயே குறித்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட விமானி உடனடியாக விமானத்தை மீண்டும் கொல்கத்தாவுக்கே திருப்பினார்.

இதனையடுத்து அவசரமாக கொலகத்தா விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து பயணிகளை பத்திரமாக அப்புறப்படுத்திய அதிகாரிகள், தீவிர சோதனை மேகொண்டனர்.

இதில் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலானது வெறும் புரளி என தெரிய வந்தது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட சோதனைக்கு பின்னர் புரளி என தெரிய வந்ததும், மீண்டும் பயணிகளை விமானத்தில் ஏற அனுமதித்தனர்.

இதனையடுத்து 2 மணி நேர தாமதத்துக்கு பின்னர் குறித்த விமானம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்