அதிகாரிகளை மிரள வைத்த கொள்ளையர்களின் கடிதம்: வைரலாகும் கடிதம்

Report Print Santhan in இந்தியா
183Shares

தமிழகத்தில் மாநகராட்சி அதிகாரிகளுக்கு வழிப்பறி கொள்ளையர்கள் சார்பில் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருப்பது வைரலாக பரவி வருகிறது.

நெல்லையில் இருக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு, செயின் அறுப்போர் சங்கம் என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில், வண்ணார்பேட்டை, கொக்கிரகுளம், குறிச்சி பகுதிகளில் இரவில் தெருவிளக்குகள் வெற்றிகரமாக 7 வது நாளாக எரியவில்லை. எங்கள் தொழிலுக்கு வசதி செய்து கொடுத்த மாநகராட்சி அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தனர்.

நெல்லையில் உள்ள பல்வேறு பகுதிகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை, இதை பராமரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டிருந்தாலும், விரைவில் முடிப்பது போல் தெரியவில்லை.

இதை அதிகாரிகளும் கண்டுகொள்ளததால், முன்பு இருந்ததை விட கொள்ளையர்கள் இதை பயன்படுத்தி செயின் பறிப்பு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களை துணிகரமாக செய்து வருவதாக பொதுமக்கள் குற்றசாட்டியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்