ஆசிரியைகள் செய்த மோசமான செயல்: உயிரை விட்ட பள்ளி மாணவி

Report Print Raju Raju in இந்தியா
995Shares

தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிக்கு இரண்டு ஆசிரியைகள் தொந்தரவு கொடுத்து துன்புறுத்தியது தொடர்பான அறிக்கையை பொலிசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

கேரளாவின் கொல்லம் நகரை சேர்ந்த கவுரி நெஹா (15) என்ற பள்ளி மாணவி தான் படிக்கும் பள்ளிக்கூடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து கடந்த மாதம் 20-ஆம் திகதி தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளியில் ஆசிரியைகளாக இருக்கும் சிந்து மற்றும் கிரிசண்ட் ஆகியோர் மாணவியை துன்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கவுரியின் பெற்றோர் குற்றம்சாட்டியிருந்தார்கள்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் சிந்துவும், கிரிசண்டும் தலைமறைவானார்கள்.

தற்போது பொலிஸ் விசாரணை முடிந்துள்ள நிலையில் இரண்டு ஆசிரியைகளுக்கு கவுரியை அதிகமாக துன்புறுத்தியது உறுதியாகியுள்ளது.

இது தொடர்பான அறிக்கையை பொலிசார் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார். மேலும், முன் ஜாமீன் கேட்டுள்ள இரண்டு ஆசிரியைகளுக்கு அதை வழங்க கூடாது எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

முன் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வரவுள்ளது. கவுரி எந்த மாதிரியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார் என்பதை கூற பொலிசார் மறுத்துவிட்டனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியைகளையும் பள்ளி நிர்வாகம் தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளது.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்