கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் கைது

Report Print Arbin Arbin in இந்தியா

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் அச்சன்புதூர் அருகில் உள்ள காசி தர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து கந்துவட்டி கொடுமையால், அவருடைய மனைவி சுப்புலட்சுமி மற்றும் 2 மகள்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலத்தில் தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தை கண்டித்து கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்தார். தரையில் தீப்பிடித்து எரிந்த நிலையில் படுத்து கிடக்கும் குழந்தையை தமிழக முதல்-அமைச்சர், நெல்லை மாவட்ட கலெக்டர், பொலிஸ் கமிஷனர் ஆகியோர் ஆடையில்லாமல், கையில் நோட்டு கட்டை வைத்துக்கொண்டு நின்று வேடிக்கை பார்ப்பது போலவும் கேலிச்சித்திரம் வரையப்பட்டு இருந்தது.

இந்த கேலிச்சித்திரம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று கேலிச்சித்திரம் வரைந்த கார்ட்டூனிஸ்ட் பாலாவை

சென்னை, கோவூர் பெரியபனிச்சேரி பகுதியில் உள்ள அவரது வீட்டில் இருந்து நெல்லை பொலிசார் கைது செய்து உள்ளனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து உள்ளது. கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை உடனடியாக திரும்பப் பெற்று அவரை விடுவிக்க வேண்டும்.

மேலும், சட்ட விதிகளை மீறி அராஜகமான முறையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம், பத்திரிகையாளர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers