நான் அரசியலுக்கு வருவது உறுதி: ரசிகர்கள் மத்தியில் உடைத்து பேசிய நடிகர் கமல்

Report Print Santhan in இந்தியா

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரசிகர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகரான கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசு மற்றும் மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை கூறி வருகிறார். அதுமட்டுமின்றி விரைவில் நான் அரசியலுக்கு வருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது நற்பணி இயக்கத்தினரை சென்னையில் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வரும் நவம்பர் 7-ஆம் திகதி தன்னுடைய பிறந்த நாள் அன்று ரசிகர்கள் கேக் வெட்ட வேண்டாம், அதற்கு பதிலாக கால்வாய் வெட்ட வேண்டிய நேரம் தான் இது என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பேசிய அவர், நான் கட்சி துவங்கி அரசியலுக்கு வருவது உறுதி, கட்சி துவங்க பணம் தேவையில்லை, அப்படி பணம் தேவைப்பட்டால் ரசிகர்கள் பணம் கொடுக்க தாயாராக இருக்கிறார்கள்.

மேலும் நான் சுவிஸ் வங்கியில் இருக்கும் பணத்தை மீட்க முயற்சிப்பேனே தவிர, அந்த வங்கியில் பணத்தை போடமாட்டேன். துவக்க கூட்டம் தான் இது, இதே போன்று 50 கூட்டங்களை நடத்த வேண்டும் என கூறினார்.

ரசிகர்கள் வழங்கும் பணத்திற்கு கணக்கு வைக்க செயலி பயன்படும் என்று கமல் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்