மத்தியபிரதேசத்தில் 70 ரூபாயை திருடி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மாணவியை நிர்வாணப்படுத்தி சோதனை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
தாமோ மாவட்டத்தில் ஒரு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வரும் மாணவி வைத்திருந்த 70 ரூபாய் தொலைந்து விட்டது.
இதையடுத்து, சந்தேகத்தில், மற்றொரு மாணவியிடம் ஆசிரியர் விசாரித்துள்ளார். அந்த மாணவி மறுத்துள்ளார். அதை நம்பாத ஆசிரியர், அந்த மாணவியை நிர்வாணப்படுத்தி சோதனை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த மாணவி நடந்தசம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து, அவர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டுள்ளனர்.