இளைஞரின் வயிற்றில் இருந்த ரூ.17.93 லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா

கோவை விமான நிலையத்தில் இளைஞர் ஒருவர் வயிற்றி வைத்து தங்கம் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சார்ஜாவில் இருந்து ஏர்அரேபியா விமானத்தில், இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த, சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் சோதனை நடத்தினர்.

மருத்துவமனைக்கு சென்று அவருக்கு எக்ஸ்ரே செய்து பார்த்ததில், அவரது வயிற்றில் தங்கக் கட்டிகள் இருந்துள்ளது. இதையடுத்து, அவரது வயிற்றில் இருந்து 5 தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிக 583 கிராம் என்றும் அவற்றின் மதிப்பு ரூ.17.93 லட்சம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அந்த நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த முகமது சாலிஹ் (29) என்பது தெரியவந்தது. வேலைவாய்ப்புத் தேடி அவர் துபாய் சென்றதாகவும், ஆனால், அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இந்த ஆண்டு கோவை விமான நிலையத்தில் 12 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 3 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்