ஐபோன் X வாங்க மேளதாளத்துடன் குதிரையில் சென்ற நபர்: வைரலாகும் வீடியோ

Report Print Deepthi Deepthi in இந்தியா

மும்பையை சேர்ந்த ஆப்பிள் பிரியர் ஒருவர் ஐபோன் X வாங்க குதிரை சவாரி மற்றும் மேள தாளத்துடன் ஆரவாரமாய் சென்றுள்ளார்.

தானே பகுதியில் உள்ள கடையினுள் செல்லாமல், குதிரையில் அமரந்த படியே அவருக்கு புத்தம் புதிய ஐபோன் X விநியோகம் செய்யப்பட்டது.

ஆப்பிள் வரலாற்றில் மிகவும் விசேஷமாக தயாரிக்கப்பட்ட ஐபோன் X ஸ்மார்ட்போன் அந்நிறுவனத்தின் பத்தாவது ஆண்டு ஐபோன் மொடலாக வெளியிடப்பட்டுள்ளது.

இதை குறிக்கவே ஐபோன் X என்ற பெயர் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஆப்பிள் ஐபோன் X (64 ஜிபி) மாடல் விலை ரூ.89,000 மற்றும் 256 ஜிபி மாடல் ரூ.1,02,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உலகில் விற்பனை துவங்கிய பெரும்பாலான நாடுகளில் புதிய ஐபோன் X வாங்க வாடிக்கையாளர்கள் வரிசையில் நின்ற சம்பவங்கள் அரங்கேறின என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers