விற்பனைக்கு வரும் முன்னாள் முதலமைச்சரின் வீடு

Report Print Arbin Arbin in இந்தியா

மூன்று முறை அந்திர மாநில முதலமைச்சராக பதவி வகித்த என்.டி.ராமராவின் சென்னை இல்லத்தை தற்போது விற்பனைக்கு விட்டுள்ளனர்.

தெலுங்கு திரைப்பட உலகில் கொடிகட்டி பறந்த என்.டி.ராமராவ், ரசிகர்களின் பேராதரவால் ஆந்திராவின் முதல்வரானார்.

திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய காலங்களில் சென்னையில் ரங்கராஜபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அவர் வசித்து வந்தார்.

கடந்த 1953ம் ஆண்டில் தி.நகரில் உள்ள பசுல்லா ரோட்டில் கஸ்தூரி சிவராவ் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாங்கிய என்.டி.ராமராவ், அதில் குடியேறினார்.

8,000 சதுர அடி பரப்பளவில் உள்ள அந்த வீடு, தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. வரவேற்பு அறை, ஒப்பனை அறை, அலுவலகம் ஆகியவற்றை கீழ்பகுதியில் வைத்திருந்த அவர், மேல்தளத்தில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார்.

திரைத்துறையில் பிரபலம் அடைந்த பிறகு ஆந்திராவில் நிரந்தரமாக தங்க தொடங்கினார். ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் அவரது ரசிகர்கள் அந்த வீட்டை பார்த்துவிட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் அவரது வீடு விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்த வீட்டை யார் வாங்க போகிறார்கள் என்பது அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புக்குள்ளாகி இருக்கிறது.

மாயாபஜார், சம்பூர்ண ராமாயணம், கர்ணன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கும் என்.டி.ராமராவ்,

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் கிருஷ்ணர் வேடம் என்றாலே அந்த காலகட்ட ரசிகர்களுக்கு என்.டி.ஆர் தான் நினைவிற்கு வருவார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்