நண்பரின் மனைவியை எரித்து கொன்ற இருவர்: திடுக்கிடும் காரணம்

Report Print Raju Raju in இந்தியா

மது குடிக்க நண்பர் பணம் தராத ஆத்திரத்தில் அவர் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொன்ற இருவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசாங்கம் மதுவை தடை செய்துள்ள பீகார் மாநிலத்தில் தான் இச்சம்பவம் நேற்று நடந்துள்ளது.

ஷிவ்நகர் என்ற கிராமத்தில் ஆல்கா மிஷ்ரா (30) என்ற பெண், வீட்டில் தனியாக இருந்த போது வீட்டுக்கு வந்த கணவர் ராஜீவ் மிஷ்ராவின் இரண்டு நண்பர்கள் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை தொடங்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளார்.

இறப்பதற்கு முன்னர் பொலிசாரிடம் ஆல்கா மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இதுகுறித்து பொலிஸ் அதிகாரி ஆனந்த் கூறுகையில், ராஜீவ் வீட்டுக்கு அவரது நண்பர்களான கிரி மற்றும் அமீட் ஆகியோர் சென்றுள்ளார்.

மது வாங்க பணம் கொடுக்கும்படி ராஜீவிடம் இருவரும் கேட்க அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதையடுத்து அன்று மாலை ராஜீவ் வீட்டில் இல்லாத போது மீண்டும் அவர் வீட்டுக்கு வந்த கிரி மற்றும் அமீட் அங்கிருந்த ஆல்கா மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாக கூறியுள்ளார்.

ஆல்காவின் மரண வாக்குமூலத்தை வைத்து இருவர் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

ஆல்காவின் கணவர் ராஜீவ் கூறுகையில், மும்பையில் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வந்த நான் கடந்த மாதம் தான் குடும்பத்தாருடன் இங்கு வந்தேன்.

கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்த போது என் மனைவி தீக்காயங்களுடன் இருந்ததையடுத்து அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்