நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ: விளக்கம் அளித்த சாமியார்

Report Print Deepthi Deepthi in இந்தியா

பெங்களூரை சேர்ந்த மட்டேவனபுரா மடத்தின் அடுத்த மடாதிபதியாக பொறுப்பேற்கவிருக்கும் தயானந்த் சாமியார் நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து சாமியார் தயானந்த் விளக்கம் அளித்துள்ளார்.

அக்டோபர் 26–ந் திகதி சாமியார் தயானந்தும், கன்னட நடிகை ஒருவரும் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் வெளியானது.

இதனால் மடத்தின் முன்பு பக்தர்கள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், சாமியார் தயானந்த் வாட்ஸ்–அப் மூலம் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், என்னை மடாதிபதியாக நியமிக்கக்கூடாது என்பதற்காக மடத்தின் நிர்வாகிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த 2014–ம் ஆண்டு சிலர் என்னை சந்தித்து நான் ஒரு பெண்ணுடன் இருப்பது போன்ற ஆபாச வீடியோவை காட்டினார்கள். அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.5 கோடி கேட்டு மிரட்டினார்கள்.

இதற்காக தர்மேந்திரா, மல்லிகார்ஜூன் என்பவர்களுக்கு ரூ.45 லட்சம் கொடுத்தேன். அதன்பிறகு, சூர்யா என்பவர் தன்னிடமும் அந்த வீடியோ இருப்பதாகவும், அதனை வெளியிடாமல் இருக்க ரூ.20 லட்சம் கொடுக்கும்படி கேட்டு மிரட்டினார். பின்னர் சூர்யாவுக்கும் ரூ.10 லட்சம் கொடுத்தேன்.

எல்லா பிரச்சினையும் முடிந்து விட்டு என்று நினைத்தபோது மடத்தின் நிர்வாகியான மகேசும் தன்னிடம் வீடியோ இருப்பதாக மிரட்டினார்.

இதனால் நான் தற்கொலைக்கு முயன்றேன். பின்னர் மகேஷ் தான் என்னை காப்பாற்றினார். தற்போது அந்த வீடியோ காட்சிகளை மகேஷ் உள்ளிட்டவர்கள் தான் வெளியிட்டு இருக்க வேண்டும். நான் மடாதிபதியாக ஆகக்கூடாது என்பதற்காக வீடியோவை வெளியிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்