கமல்ஹாசன் மீது வழக்குபதிவு

Report Print Fathima Fathima in இந்தியா

நடிகர் கமல்ஹாசன் தமிழ் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு பாரதீய ஜனதா மற்றும் சிவசேனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

மேலும் கமலஹாசனுக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர முடியுமா என ஆலோசிப்பதாக பா.ஜனதா தலைவர் வினெய் காதியார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் உத்திரபிரதேசம் பனாரஸ் பொலிஸ் நிலையத்தில் கமல் மீது வழக்குபதிவு செய்துள்ளனர்.

மதத்துக்கு எதிராக கருத்து தெரிவித்தல், அவதூறாக பேசுதல் ஆகியவற்றுக்காக கமல்ஹாசன் மீது குற்றவியல் சட்ட பிரிவுகள் 500, 511, 298, 295(a), 505(c) ஆகிய 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...