மனைவியுடன் தகாத உறவு: நண்பனை கொன்றவரின் பரபரப்பு வாக்குமூலம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாட்டில் மனைவியை உல்லாசத்துக்கு அழைத்த நண்பனை கணவன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூர் வெங்கடசமுத்திரத்தை சேர்ந்தவர் வேலன்(வயது 40), லாரி ஓட்டுநரான இவர் செல்வபெருமாள் நகரில் உள்ள சகோதரியின் வீட்டில் தங்கி வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் சசிகுமார் என்பவரது மனைவி நிர்மலாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது, இருநாட்களுக்கு முன் இருவரும் தனியாக வீட்டில் இருந்த போது சசிகுமார் வந்துள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் அம்மிக்கல்லை போட்டு வேலனை சசிகுமார் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்தவரை விபத்தில் சிக்கிவிட்டதாக கூறி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சசிகுமாரும், நிர்மலாவும் அனுமதித்தனர்.

இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர், இதுதொடர்பாக வழக்குபதிவு செய்துள்ள பரதராமி பொலிசார் சசிகுமாரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது சசிகுமார் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், நானும், வேலனும் நெருங்கிய நண்பர்கள், அக்கம்பக்கத்தில் உள்ள பைக்குகளை திருடி விற்று வேலன் பிழைப்பு நடத்தினோம்.

அடிக்கடி வீட்டுக்கு வருவார், அவருக்கும் என்னுடைய மனைவிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

இது தெரியவந்ததும் என் மனைவியை கண்டித்தேன், அன்றைய தினமும் அதேதான் நடந்தது, நான் சண்டையிட்ட போது என்னை அடித்தார், என் மனைவியையும் தாக்கினார்.

வெளியே திரும்பிவிட்டு வீட்டுக்கு வந்த வேலன் குடிபோதையில் நிர்மலாவிடம் தவறாக நடக்க முயன்றார், இதனால் ஆத்திரத்தில் அவரை கீழே தள்ளி அம்மிக்கல்லை போட்டு கொன்றேன்.

மருத்துவமனையில் சேர்த்து விபத்து நடந்துவிட்டதாக நாடகம் ஆடினோம், பொலிசார் விசாரித்த போது உண்மை வெளிவந்தது என தெரிவித்துள்ளார்.

இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிசார் வேலூர் சிறையில் அடைத்தனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...