இன்று இரவும் மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

Report Print Fathima Fathima in இந்தியா

சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழையால் நகரின் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் இன்று வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவில், தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலையானது அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் டெல்டா பகுதிகள் முதல் சென்னைவரை மழை நீடிக்கும்.

சென்னை கடலோரப் பகுதியில் இன்று பின்னிரவில் காற்று குவியும் என்பதால் இன்றிரவும் மழை நீடிக்கும்.

ஆனால், நேற்றைப்போல் மழை இருக்குமா எனத் தெரியாது என பதிவிட்டுள்ளார்.

இன்று அதிகாலை போடப்பட்ட பதிவில், நேற்று தொடங்கிய மழை முடிவுக்கு வந்துவிட்டது.

அச்சப்படத் தேவையில்லை, மழை தரும் மேகக்கூட்டங்கள் சென்னை கரையைவிட்டு விலகியே நிற்கின்றன.

எனவே மிதமான மழையே பொழியும், கனமழைக்கு வாய்ப்பில்லை.

எனினும் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் சென்னைக்கு மழை முடிந்துவிட்டது என கூறிவிட முடியாது என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

249 இடங்களில் தண்ணீர் வடிந்துள்ளது: மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன்

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், மழை பாதிப்புகள் தொடர்பாக 599 புகார்கள் வந்துள்ளன.

249 இடங்களில் தண்ணீர் அகற்றம் செய்யப்பட்டுள்ளது, முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...