ஊட்டச்சத்து குறைபாடு உள்ள நாடு: முதலிடத்தை பிடித்த இந்தியா

Report Print Raju Raju in இந்தியா

ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில், இந்தியா முதலிடத்தில் உள்ளது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பான அசோசெம் மற்றும் லண்டனைச் சேர்ந்த தனியார் நிறுவனம் உலகம் முழுவதும் நடத்திய ஆய்வின் மூலம் இது உறுதியாகியுள்ளது.

2005-லிருந்து 2015 வரை பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் நடத்திய ஆய்வில், இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து உள்ளது தெரியவந்தது.

உலகளவில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் எண்ணிக்கையில் 50 சதவீதம் பேர் இந்தியாவில் தான் உள்ளனர்.

நகரங்களில் வசிக்கும் குழந்தைகளை விட கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் தான் இதில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...