காதல் வலைவீசி இளம்பெண் கொலை: நிர்வாண நிலையில் உடல் மீட்பு

Report Print Fathima Fathima in இந்தியா
1212Shares
1212Shares
ibctamil.com

தமிழகத்தில் இளம்பெண்ணை அவரது காதலரே கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் சாய்பாபா காலனியை சேர்ந்த ஹைதர் அலியின் மகள் ரிஸ்வான், கடந்த 16ம் திகதி இவரை காணாததால் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் ரிஸ்வான், பிரசாந்த் என்ற வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்தது.

அவரிடம் பொலிசார் விசாரணை நடத்திய போது உண்மைகள் வெளிவந்தன, முதலில் கல்லார் பகுதி மலையிலிருந்து ரிஸ்வான் கீழே தவறி விழுந்து உயிரிழந்ததாக கூறினார்.

ஆனால் ரிஸ்வானின் உடல் நிர்வாணமாக கண்டெடுக்கப்பட்டதும், அவரது நகைகள் உடலுக்கு அருகே புதைக்கப்பட்டிருந்ததால் பொலிசார் சந்தேகித்தனர்.

விசாரணையை தீவிரப்படுத்திய நிலையில், வனப்பகுதிக்கு ரிஸ்வானை அழைத்து சென்ற பிரசாந்த் கல்லால் அடித்து கொலை செய்து முட்புதரில் புதைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

நிர்வாண நிலையில் ரிஸ்வானின் உடல் இருந்ததால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

ரிஸ்வான் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்