யுவராஜ் சிங் மீது வழக்கு பதிவு

Report Print Fathima Fathima in இந்தியா

இந்திய அணி வீரரான யுவராஜ் சிங், ஷப்னம் சிங் மீது குடும்ப வன்முறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை யுவராஜின் தம்பி மனைவியான அகன்க்‌ஷா ஷர்மா அளித்துள்ளார்.

யுவராஜ் மற்றும் அவரது தாய் ஷப்னம் சிங் மீது புகார் அளித்துள்ளதாக அகன்க்ஷாவின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு 21ம் திகதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பிக்பாஸில் கலந்து கொண்ட போது யுவராஜ் குடும்பம் பற்றி குற்றம் சாட்டியிருந்தார்.

அதாவது, தன்னை குழந்தை பெற்றுக் கொள்ளுமாறு யுவராஜின் தாய் வற்புறுத்தியதாகவும், தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் கணவரை பிரிந்து தாய் வீட்டில் தங்கியதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers