இதுவல்லவோ அன்பு! நாய்க்குட்டியை கட்டித்தழுவி சாப்பாடு ஊட்டிய குரங்கு

Report Print Fathima Fathima in இந்தியா

மனிதாபிமானம் என்பது குறைந்து வரும் இன்றைய சூழலில் தன் இனத்தை சாராத ஒரு உயிரின் மீது அன்பு செலுத்தும் குரங்கினத்தை பற்றி என்ன சொல்வது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தில் அமைந்துள்ளது பி.எஸ்.என்.எல். அலுவலகம்.

இதன் எதிரே இருக்கும் ஏராளமான புளிய மரங்களில் மலைப்பகுதியில் இருந்து குரங்குகள் வந்து செல்வது வழக்கம்.

அப்படி அவை மரக்கிளைகளில் விளையாடிக்கொண்டிருந்த தருணத்தில் புளிய மரத்தின் அடியில் நாய்க்குட்டி ஒன்று குளிரில் நடுங்கிக்கொண்டிருந்தது.

அதனை கண்ட குரங்கு ஒன்று மரத்திலிருந்து இறங்கி வந்து அந்த நாய்க்குட்டியினை அணைத்துக் கொண்டு மரத்தின் உச்சிக்கு சென்றது.

அதனைக் கண்ட பொதுமக்கள் சிலர் தாங்கள் கொண்டு வந்த ரொட்டித் துண்டுகளை குரங்குகளுக்கு வழங்கினர். மேலிருந்து வந்த அந்த குரங்கு ரொட்டித் துண்டினை எடுத்துச் சென்று நாய்க்குட்டியை தன் மடியில் வைத்து வருடியவாரே அதற்கு ஊட்டியது.

இச்சம்பவம் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியதோடு மனிதர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிப்பதாகவும் அமைந்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்