ரஷ்ய இளைஞரின் கனவில் வந்த சிவபெருமான்: என்ன சொன்னார் தெரியுமா?

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் பிச்சையெடுத்து வந்த ரஷ்ய வாலிபர், தனது கனவில் சிவபெருமான் வந்து பிச்சையெடுக்க சொன்னதால் தான் இவ்வாறு செய்தேன் என பொலிசாரிடம் கூறியுள்ளார்.

ரஷ்ய வாலிபர் ஈவ்ஜெனீ பெர்ட்னி கோவ் என்பவர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.

இவரது ஏடிஎம் கார்டு முடங்கியதால் காஞ்சிபுரம் கோயிலில் பிச்சை எடுத்தார். இந்த செய்தி காவல்துறைக்கு தெரியவந்ததையடுத்து, அவர்கள் ரஷ்ய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அவரிடம் தெரிவித்தனர்.

ஆனால், ரஷ்ய தூதரகம் செல்ல மறுத்த அந்த வாலிபர், எனக்கு பிச்சையெடுப்பது பிடித்திருக்கிறது, தொடர்ந்து பிச்சையெடுப்பேன் என்றும் ரஷ்ய தூதரகத்தின் உதவி எனக்கு தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

தெருவில் பிச்சையெடுத்த அவருடன் பலர் செல்பி எடுக்க முற்படுகையில், ரூ.100 தர வேண்டும் என்று அந்த வாலிபர் கேட்டுள்ளார்.

இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவந்ததையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தியதில், “என் கனவில் சிவபெருமான் வந்து என்னை பிச்சை எடுக்க சொன்னார். அதனால் தான் நான் பிச்சை எடுக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பொலிசார், அவரிடம் இருந்த ஆவணங்களை சோதனை செய்து பார்த்ததில் அவை அனைத்தும் சரியாக இருந்ததால் அவரை விடுவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers