காங்கிரஸ் சமூக வலைதள தலைவராக நடிகை ரம்யா நியமனம்

Report Print Thayalan Thayalan in இந்தியா
காங்கிரஸ் சமூக வலைதள தலைவராக நடிகை ரம்யா நியமனம்
40Shares
40Shares
lankasrimarket.com

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி அக்கட்சியின் சமூக வலைத்தள குழுவின் தலைவராக நடிகை ரம்யாவை நியமித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட சுற்றறிக்கையில், காங்கிரஸ் கட்சியின் சமூக வலைத்தள குழுவிற்கு தலைவராக ‘தீபந்தர் சிங் ஹூடா’ இருந்து வந்தார்.

இந்நிலையில் அவருக்குப் பதிலாக சமூக வலைதள குழுவின் தலைவராக நடிகையும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ‘ரம்யா’ நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் காந்தி இந்த முடிவை எடுத்துள்ளார்.

நடிகை ரம்யா சமூக வலைதளங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் தொடர்பான செய்திகளை மட்டுமல்லாமல் சமூக பிரச்சினைகள் தொடர்பாகவும் தனது கருத்துக்களை துணிச்சலுடன் பகிர்ந்துள்ளார்.

அவ்வப்போது எழும் அரசியல் விவாதங்களில் பா.ஜ.கவினர் உள்ளிட்ட எதிர்க்கட்சியினருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்