ஒரு யானை குளிப்பதற்காக பத்து லட்சத்தில் கட்டப்பட்ட நீச்சல் குளம்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in இந்தியா
429Shares
429Shares
lankasrimarket.com

கோயிலில் வளர்க்கப்படும் கஸ்தூரி என்ற யானைக்கு பத்து லட்சம் ரூபாய் செலவில் நீச்சல் குளம் கட்டப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பழனியில் உள்ள முருகன் கோயிலில் பல ஆண்டுகளாக கஸ்தூரி என்ற பெயரிடப்பட்ட யானை பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதுநாள் வரையில் அங்குள்ள சண்முகா நதியில் தான் கஸ்தூரி குளித்து வந்தது.

இந்நிலையில், தற்போது கஸ்தூரி யானை குளிப்பதற்காக கோயில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான தோட்டத்தில் பத்து லட்சம் செலவில் நீச்சல் குளம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

சுமார் 2 மீட்டர் உயரம் கொண்ட இந்த நீச்சல் குளத்தின் தரையில் மணல் பரப்பப்பட்டுள்ளது.

இதோடு ஷவர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நீச்சல் குளத்திலும், ஷவரிலும் கஸ்தூரி மகிழ்ச்சியாக குளித்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்