கணவரை கொன்ற வழக்கு: மனைவி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

Report Print Raju Raju in இந்தியா

கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உட்பட மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தின் கள்ளக்குறிச்சியை சேர்ந்த செந்தில் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் செந்திலின் மனைவி கவிதாவுக்கும், சம்சுதின் என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும், இதை செந்தில் தட்டிகேட்டதால் ஆத்திரத்தில் சம்சுதின் அவரை கொன்றதும் தெரியவந்தது.

செந்திலை கொலை செய்யும் போது அவரின் நண்பர் மணிகண்டன் மற்றும் கவிதாவும் இதற்கு உதவியுள்ளனர்.

இதையடுத்து மூவரையும் பொலிசார் கைது செய்த நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

மூவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்