போதை மருந்துக்கு அடிமையான கணவன்: இளம் மனைவியை 7 பேருக்கு விருந்து வைத்த கொடுமை

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் போதை மருந்துக்கு அடிமையான கணவன் தனது பணத்தேவையை பூர்த்தி செய்ய இளம் மனைவியை நண்பர் 7 பேருக்கு விருந்து வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபின் லுதியானா மாவட்டத்தில் உள்ள தாக்கா பகுதியில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

22 வயதேயான பாதிக்கப்பட்ட அந்த இளம் பெண் தமக்கு நேர்ந்த கொடுமை குறித்து பொலிசாரிடம் புகார் அளித்ததை அடுத்தே குறித்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கும் அந்த இளைஞருக்கும் திருமணம் நடந்துள்ளது. தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகவும் உள்ளார்.

இந்த நிலையில் போதை மருந்துக்கு அடிமையான அந்த இளைஞர் அதே கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சிலரிடம் இருந்து தமது தேவைக்கு பணம் பெற்றுள்ளார்.

அதற்கு பதிலாக தமது மனைவியுடன் உறவு வைத்துக் கொள்ளவும் அனுமதித்துள்ளார். இதனையடுத்து அந்த கிராமத்தில் உள்ள 7 இளைஞர்கள் குறித்த இளம் பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்துள்ளனர்.

மட்டுமின்றி அதில் சிலர் புகைப்படங்கள் எடுத்து தொடர்ந்து மிரட்டியும் வந்துள்ளனர். இந்த நிலையில் தமக்கு நேர்ந்த கொடுமை மேலும் தொடராமல் இருக்க அவர் துணிவுடன் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து வழக்கு பதிந்த பொலிசார் அந்த 7 இளைஞர்களையும் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்