சாம்பாரில் சுவையில்லை என கூறிய கணவர்: உயிரை விட்ட மனைவி

Report Print Raju Raju in இந்தியா

சாம்பார் சுவையாக இல்லை என கணவர் திட்டியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் மேற்கு பெங்களூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ் (55). இவர் மனைவி நாகரத்தினம் (50)

இவர்களுக்கு மிதுன் என்ற மகன் உள்ளார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

பக்கவாதம் நோயால் அவதிப்பட்டு வரும் சீனிவாஸ் வேலைக்கு செல்ல முடியாததால் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இந்நிலையில், சீனிவாஸுக்கும், நாகரத்தினத்துக்கும் அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.

உடல்நலம் சரியில்லாத தன்னை மனைவி சரியாக கவனித்து கொள்ளவில்லை என சீனிவாஸ் கோபித்து கொள்வாராம்.

இதனிடையில், நாகரத்தினம் வைத்த சாம்பார் சுவையாக இல்லை என சீனிவாஸ் நேற்று அவரிடம் கூறியுள்ளார்.

இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட மனமுடைந்த நாகரத்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்