18 பக்கத்திற்கு உருக்கமான கடிதம்: தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பட்டதாரி பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா

சென்னையில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட பட்டதாரி பெண்ணின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ராஜா மற்றும் தேவி ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணம் நடைபெற்று மருமகளாக வீட்டிற்கு வந்த நாள் முதல் தேவியிடம் பணம் கேட்டு கொடுமைபடுத்தியுள்ளனர்.

இதனால் மனஅழுத்தத்திற்கு ஆளான தேவி தற்கொலை செய்துகொண்டார். , மாமனார் மாமியார் கணவன் மூன்று பேரும் வரதட்சணை கேட்டு தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும், ஒருவேளை மட்டுமே உணவு கொடுத்து தனி அறையில் பூட்டி கொடுமைப்படுத்துவதாகவும் 18 பக்கத்திற்கு அவர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது.

இந்த சம்பவம் குறித்து தேவியின் உறவினர்கள் மணலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து மணலி பொலிசார் வழக்கு பதிவு செய்து தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி கணவர் டார்வின் ராஜாவை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்