சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பத்மநாபசுவாமி கோயிலின் வைரகற்கள் மீட்பு

Report Print Deepthi Deepthi in இந்தியா

சில ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் வைரகற்கள் மீட்கப்பட்டுள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவிலில் சயன கோலத்தில் காட்சி தரும் மூலவரான பத்மநாபசுவாமி விலை மதிப்பு மிக்க தங்கம் மற்றும் வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு மூலவருக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஆபரணங்களை மதிப்பீடு செய்தபோது, வைர ஆபரணம் ஒன்றில் இருந்த 12 வைர கற்கள் மாயமாகிவிட்டிருந்தது.

இந்த வைர கற்கள் பல கோடி ரூபாய் மதிப்புமிக்கவை என்பதால் இது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி விசாரணை நடத்த குற்றப்பிரிவு பொலிசார் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருட்டு போனதாக கருதப்பட்ட 12 வைர கற்களும் கோவில் வளாகத்துக்கு உள்ளேயே கிடப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அந்த வைர கற்கள் மீட்கப்பட்டன.

இதுபற்றி விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த வைர கற்களை யாரும் திருடிச் செல்லவில்லை. பத்மநாபசுவாமியின் வைர நகைகளை பூஜைக்காக கையாண்டபோது அவை தற்செயலாக கோவில் வளாகத்துக்குள் விழுந்திருக்கலாம். அவற்றை மீட்டு விட்டோம்.

இந்த 12 வைரகற்களும் வைர ஆபரணத்தில் இருந்த 26 வைர கற்களின் ஒரு பகுதிதான்.

மூலவரின் ஆபரணங்களில் இதேபோல் காணாமல் போன இன்னும் பல ரத்தினக் கற்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers