11 வயது சிறுமியை 18 வயது பெண்ணாக மாற்றிய குடும்பம்

Report Print Raju Raju in இந்தியா
559Shares

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 11 வயது மதிக்கத்தக்க சிறுமி அங்குள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

சிறுமிக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த குடும்பத்தார், அவருக்கு 18 வயது நெருங்குவது போன்ற போலி ஆதார் அட்டையை தயார் செய்துள்ளனர்.

பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் சிறுமிக்கு திருமணம் நடக்கவிருந்த நேரத்தில் பொலிசாரும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் சம்பவ இடத்துக்கு சென்று திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தனக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடப்பதாக சிறுமி சில தினங்களுக்கு முன்னர் பள்ளி ஆசிரியரிடம் கூறியுள்ளார்.

இதையடுத்தே நாங்கள் திருமணத்தை தடுத்து நிறுத்தினோம். சிறுமியின் குடும்பம் ஏழ்மையான நிலையில் உள்ளது. அவர்களின் இன்னொரு மகளான 20 வயது பெண்ணுக்கு திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தார்கள்.

பணத்தை சேமிக்க அவருடனே, அவரின் தங்கையான 11 வயது சிறுமிக்கும் திருமணம் செய்ய குடும்பத்தார் ஏற்பாடு செய்திருந்தார்கள் என கூறியுள்ளனர்.

குடும்பத்தாரிடமிருந்து மீட்கப்பட்டுள்ள சிறுமி பள்ளி ஆசிரியர்கள் பராமரிப்பில் தற்போது இருக்கும் நிலையில், சிறுமியின் குடும்பத்தாருக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்