காதலனுக்கு தனது நிர்வாண படத்தை அனுப்பி சிக்கலில் மாட்டிய இளம் பெண்

Report Print Arbin Arbin in இந்தியா

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இளம் பெண் ஒருவர் காதலனுக்கு அனுப்பிய தனது நிர்வாணப்படத்தால் சிக்கலில் மாட்டிய சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூருவில் வசித்து வரும் 20 வயது இளம் பெண் ஒருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தமது காதல் கேட்டுக் கொண்டதால் தனது நிர்வாண படத்தை வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

இதனிடையே குறித்த நிர்வாண படத்தை அந்த நபர் தனது நண்பர்கள் குழுவுக்கு பகிர்ந்துள்ளார். இதனையடுத்து அந்த புகைப்படமானது பலரும் பார்த்ததுடன், அந்த இளம் பெண்ணிற்கு ஆபாச செய்திகள் அனுப்பி தொல்லை அளித்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த இளம் பெண்ணை தொடர்பு கொண்ட தொழில் அதிபர் ஒருவர், குறித்த படத்தை அழிக்க தாம் உதவுவதாக கூறி, நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார்.

ஒரு கட்டத்தில் நான் உன்னை காதலிக்கிறேன்‘ என்று இளம் பெண்ணிடம் தொழில் அதிபர் காதலை வெளிப்படுத்தினார். இந்த காதலை மாணவியும் ஏற்றுக்கொண்டார். இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர்.

இதில் இருவரின் காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டனர்.

இந்த நிலையில், குறித்த இளம் பெண்ணிற்கு மீண்டும் பிரச்சினை தொடங்கியது. கடந்த சில மாதங்களாக அவரை அவருடைய கணவர் மனதளவிலும், உடல்ரீதியாகவும் சித்திரவதைக்கு ஆளாக்கி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தன்னிடம் உள்ள அந்த நிர்வாண படத்தை இணையதளங்களில் வெளியிடுவதாகவும் தமது மனைவியை அவர் மிரட்டியுள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த அந்த பெண் சமீபத்தில் தனது கணவரை பிரிந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.

இதனிடையே இரு குடும்பத்தாருக்கும் இடையே நடந்த ஆலோசனைகள் அனைத்தும் தோல்வியில் முடியவே, குறித்த பெண் விவாகரத்து பெற்றுக்கொடுக்க வேண்டும் என அவர் ஆலோசகரர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த அவர் கணவர், தமது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் இந்த வழக்கு மேலும் சிக்கலில் சிக்கியுள்ளது. இருந்தபோதிலும் இந்த தம்பதிக்கு தொடர்ந்து ஆலோசனை வழங்கப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...