பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் ஏழைகள் அல்ல: மத்திய அமைச்சர்

Report Print Arbin Arbin in இந்தியா

பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் அனுதினம் பட்டினி கிடக்கும் ஏழைகள் அல்ல என மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம் தெரிவித்துள்ளது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாளும் எகிறும் பெட்ரோல் விலை குறித்த கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் அல்ஃபோன்ஸ் கண்ணந்தானம், பெட்ரோல் வாங்கும் சக்தி கொண்டவர்கள் மட்டுமே வாகங்களை பயன்படுத்துவதாகவும், பெட்ரோல் வாங்குபவர்கள் ஒன்றும் ஏழை எளிய மக்கள் அல்ல எனவும் அவர் பதிலளித்துள்ளார்.

மேலும் பெட்ரோல் மீதான வரியில் கிடைக்கும் பணத்தை அரசு ஒன்றும் ஊழல் செய்யவில்லை எனவும், அந்தத் தொகை ஏழை எளிய மக்கள் கவுரவத்துடன் வாழ்வதற்கான நலத்திட்டங்களுக்கே பயன்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் கண்ணந்தானம் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்துக்கு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நடுத்தர வர்க்க மக்களை இழிவு படுத்தும் செயல் இது என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...