வைரலாகும் கமல்ஹாசனின் அமைச்சரவை புகைப்படம்

Report Print Raju Raju in இந்தியா

கமல்ஹாசனின் அமைச்சரவை போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து அரசியல் குறித்த கருத்துக்களை கூறி வரும் நிலையில் தனிக்கட்சி தொடங்குவதையும் கிட்டத்தட்ட உறுதி செய்து விட்டார்.

இந்நிலையில், கமல்ஹாசன் அரசியலுக்கு வந்து வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் அவரின் அமைச்சரவை எப்படியிருக்கும் என ரசிகர்கள் கற்பனையில் உருவாக்கிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

குறித்த புகைப்படத்தில் முதல்வர் கமல்ஹாசனுடன் 13 பேர் உள்ளனர், எல்லோரின் உருவமுமே கமல்ஹாசனாக தான் உள்ளது.

அதில் ஒருவர் பெண் அமைச்சர். முதல்வர் மட்டும் சபாரி உடையில் இருக்கிறார், அமைச்சர்கள் அனைவரும் வேட்டி-சட்டை அணிந்து இருக்கிறார்கள்.

கமல்ஹாசன் சினிமாவில் நடித்த பலவித வேடங்களை வைத்து வேடிக்கையாக இந்த புகைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers