தமிழ்நாடு சாரண, சாரணியர் தேர்தலில் எச்.ராஜா படுதோல்வி

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழ்நாடு சாரண, சாரணியர் தலைவர் தேர்தலில் எச்.ராஜா படுதோல்வி அடைந்துள்ளார்.

சாரண- சாரணியர் இயக்கத்தின் பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.

இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பா.ஜ.கவின் தேசிய செயலாளரான எச்.ராஜாவும் அவரை எதிர்த்து பள்ளி கல்வியின் முன்னாள் இயக்குநர் மணி என்பவரும் போட்டியிட்டனர்.

வாக்குபதிவு முடிந்த பின்னர் இன்று பிற்பகல் மூன்று மணியளவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதில் மொத்தம் 504வாக்குகளில் தலைவர் பதவிக்கு 286 வாக்குகளும், துணைத்தலைவர் பதவிக்கு 285 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மணி 232 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார், எச்.ராஜாவுக்கு வெறும் 52 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தன.

இதன்பின்னர் பேசிய எச்.ராஜா, செப்டம்பர் 23ம் திகதி வைக்க வேண்டிய தேர்தலை இன்றே வைத்ததால் தேர்தல் செல்லாது, முறைகேடாக 10 நிமிடத்துக்கு முன்பே தேர்தல் தொடங்கிவிட்டது என கூறியுள்ளார்.

மேலும் கடந்த 12 ஆண்டுகளாக சாரண, சாரணியர் இயக்கத்தில் முறையாக பயிற்சிகள் வழங்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers