கணக்குக்கு தவறான விடை கூறி ஆசிரியரை எச்சரித்த கல்வி அமைச்சர்

Report Print Arbin Arbin in இந்தியா

கணக்கு கேட்டு, விடையை சரியாக கூறிய ஆசிரியையிடம், விடை தவறு என கூறி அமைச்சர் எச்சரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் கல்வி அமைச்சராக இருப்பவர் அரவிந்த் பாண்டே.

தலைநகர் டேராடூனில் உள்ள பெண்கள் பள்ளிக்கு, அமைச்சர் பாண்டே சென்று, கல்வியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

அப்போது ஒரு வகுப்பில் மாணவிகளுக்கு ஆசிரியை ஒருவர் அறிவியல் பாடம் நடத்தி கொண்டிருந்தார். வகுப்புக்குள் நுழைந்த அமைச்சர் ஆசிரியையிடம் கேள்வி கேட்க விரும்பினார்.

'(-) + (-) = ?' என கேட்டார். இதற்கு ஆசிரியை, '(-)' என, சரியாக பதில் அளித்தார். 'இந்த பதில் தவறு' என கூறிய அமைச்சர், '(+)'தான் சரியான விடை என தெரிவித்தார்.

''நானும் அறிவியல் படித்துள்ளேன். கணித பாடத்தில், '(-) + (-)' = (+) ஆனால் ரசாயன பாடத்தில், '(-)' என்பதுதான் விடை,'' என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து வகுப்பறையை விட்டு வெளியேறும் முன்னர், 'நீங்கள் பெண் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செல்கிறேன். மாணவர்களுக்கு தவறான முறையில் இனி பாடம் எடுக்காதீர்கள் என எச்சரித்து சென்றுள்ளார்.

அமைச்சரின் இந்த செயல், பதிவான வீடியோ, சமூக வலைதளங்ளில் வெளியானது. இதையடுத்து, அமைச்சரை விமர்சித்து, பலர் கருத்து வெளியிட்டிருந்தனர்.

இது பற்றி அமைச்சர் பாண்டே கூறுகையில், ஆசிரியர்களை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. என் பதில் தவறு என நிருபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers