தமிழர்களை கைது செய்து அரைநிர்வாணமாக்கி சித்ரவதை: ஆந்திராவில் பயங்கரம்

Report Print Arbin Arbin in இந்தியா

ஆந்திராவில் செம்மரம் வெட்டச் சென்றதாக கூறி 23 தமிழர்களை கைது செய்துள்ள பொலிசார், அரை நிர்வாணத்துடன் குறுகிய சிறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலத்தின் திருப்பதி பகுதியில் இருந்து கடப்பா நோக்கி 3 பேருந்துகளில் சென்ற 23 தமிழர்களை கடந்த 13ம் திகதி கோடூர் பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஆனால் குறித்த தகவல் அறிந்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களுக்கு ஆந்திரா அரசு அனுமதி மறுத்தனர்.

மேலும், கைது செய்யப்பட்டு 3 தினங்கள் கடந்தும், இதுவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

எந்த ஒரு குற்றவாளியையும் கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டிய நிலையில், குற்றச்சாட்டு குறித்த ஆதாரங்கள் இல்லாததால், 23 தமிழர்களையும் அரை நிர்வாணத்தில், குறுகிய அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்வதாகவும், பொய் வழக்கு போட முயற்சிப்பதாகவும் அதிர்ச்சி தகவல்வெளியாகியுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு உரிய நடடிக்கை எடுத்து சித்ரவதை செய்யப்படும் தமிழர்களை மீட்க வேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers