ஜெயலலிதாவை திட்டமிட்டு கொன்றனர்: அமைச்சர் பரபரப்பு தகவல்

Report Print Fathima Fathima in இந்தியா

ஜெயலலிதாவை திட்டமிட்டு கொன்றதால் தான் சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்கிவிட்டோம் என திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கலில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழாவில் பேசிய அமைச்சர், இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியின் தலைவரான ஜெயலலிதாவை காப்பாற்ற பிரதமர் மோடி முயன்றார்.

இதற்காக மருத்துவமனைக்கு வந்த பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியை கூட பார்த்து பேசவிடாமல் சசிகலா குடும்பத்தினர் மருத்துவமனையிலேயே வைத்து ஜெயலலிதாவை கொன்று விட்டனர்.

இதன் தொடர்ச்சியாகவே அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் புகைப்படம் அகற்றப்பட்டது.

தொண்டர்கள் எதிர்பார்ப்பின்படி, சசிகலா, தினகரனும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...