தற்கொலைக்குத் தூண்டுகிறதா சரஹா செயலி?

Report Print Arbin Arbin in இந்தியா

சரஹா செயலி மூலம் வந்த கருத்துகளால் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஒரு பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாகப் பெரும்பாலானோர் பதிவிறக்கம் செய்யும் செயலி சரஹா. இது கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உதவுகிறது.

இதில் அனுப்புநரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும். நமக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரியாதவர்கள் போன்று நம் கருத்துகளை தெரியப்படுத்துவதுதான் இதன் சிறப்பம்சம்.

அதில் நல்ல கருத்துக்களும் மனதைக் காயப்படுத்தும் கருத்துக்களும் இடம்பெறுகின்றன. ஆரம்பத்தில் விளையாட்டாக இருந்து வந்த சரஹா தற்போது, ப்ளூ வேலைப் போலவே அபாயகரமானதாக மாறிவருகிறது.

கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்த பெண் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் சரஹா செயலி இணைப்பைப் பகிர்ந்துகொண்டதன் மூலம் வந்த ஆபாசக் கருத்துகளால் மனமுடைந்து தற்கொலை செய்துகொள்ளப் போவதாகப் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவு சில மணி நேரங்களில் வைரலாகப் பரவியது. இப்பதிவு ஸ்கிரீன் ஷாட் எடுத்து ரச்சகொண்டா பொலிசாரின் பேஸ்புக் கணக்கிற்கு அனுப்பப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த ரச்சகொண்டா காவல் துறை ஆய்வாளர் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி கவுன்சிலிங் வழங்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பேசிய அந்தப் பெண், “சரஹா மூலம் வந்த அநாமதேயமான கருத்துக்களால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். கடுமையான மன உளைச்சலால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers