துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமி

Report Print Arbin Arbin in இந்தியா
249Shares
249Shares
ibctamil.com

இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் தாயார் மற்றும் சகோதரர் முன்னிலையில் 11 வயது சிறுமியை கும்பலொன்று துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசத்தின் குவாலியர் பகுதியில் குறித்த கொடுஞ்செயல் அரங்கேறியுள்ளது.

கடந்த புதன்கிழமை நள்ளிரவு ஒரு மணி வேளையில் குறித்த சிறுமியின் வீட்டுக்குள் 3 பேர் கொண்ட கும்பல் வலுக்கட்டாயமாக நுழைந்துள்ளது.

பின்னர் துப்பாக்கியை காட்டி மிரட்டி தாயார் மற்றும் சிறுமியின் இளைய சகோதரர் இருவரையும் கயிற்றால் கட்டிப் போட்டுள்ளது.

மூன்றாவது நபர் ஒருவர் குறித்த 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர் ஜன்வர் சிங்(36) எனவும் அவருக்கு உடந்தையாக ராஜு(25) மற்றும் ரம்னிவாஸ்(24) ஆகியோர் இக்குற்றச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் குறித்த நபர்கள் மூவரையும் பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்