இந்தியாவை சேர்ந்த ரோஹித் சர்மா என்ற மாணவனுக்கு கூகுளில் ரூ.1.44 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்ததாக வெளியான செய்தியில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.
சண்டிகரைச் சேர்ந்தவர் ஹர்ஷித் சர்மா, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் தொழில்நுட்ப பிரிவில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
மாணவன் ஹர்ஷித்துக்கு பத்து வயதிலிருந்தே கிராபிக் டிசைனராக வேண்டும் என்ற விருப்பம் இருந்துள்ளது.
இதனால் படிப்படியாக கிராபிக் டிசைனிங் கற்றுக்கொண்டதாகவும், படங்களுக்கு போஸ்டர்கள் செய்து பணம் சம்பாதித்தும் வந்துள்ளான்.
இந்நிலையில் கூகுளில் ரூ.1.44 கோடி சம்பளத்துடன் வேலை கிடைத்ததாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளான்.
இதுதொடர்பாக ஊடகங்களிலும் தகவல்கள் வெளியானது, ஆனால் இது உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
இது மாணவனின் குறும்புத்தனம் என்றும், கூகுளில் அளித்தது போன்றே சான்றிதழையும் வழங்கியதால் பள்ளி ஆசிரியர் நம்பியதுடன் மாவட்ட நிர்வாகத்துக்கும் தகவல் அளித்ததே செய்தி காட்டுத்தீ போல பரவ காரணம் எனவும் தெரியவந்துள்ளது.