இந்தியாவில் 16 வயது சிறுவன் 15 சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து அதிர வைத்துள்ளது.
மும்பையிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது, கடந்த 2016ம் ஆண்டு சிறுவனை அவனின் நண்பன் ஒருவன் வீட்டில் வைத்து பலாத்காரம் செய்து வீடியோவாக பதிவு செய்து வைத்துள்ளான்.
பின்னர், வெளியில் சொன்னால் வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டிய சிறுவன் தனது நண்பர்களுக்கு வீடியோவை பகிர்ந்துள்ளான். இதனையடுத்து, அவர்களும் சிறுவனை வீடியோ காட்டி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன் பள்ளி மைதானத்தில் வைத்து 15 இளைஞர்கள் சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். சிறுவனை அதை மறுக்க முயன்ற போது அனைவரும் சேர்ந்து சிறுவனை தாக்கியுள்ளனர்.
அதில், ஒருவன் சிறுவனை பணம் கேட்டு மிரட்டியுள்ளான், சிறுவன் பணம் தர மறுக்க மீண்டும் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளான்.
இதை சகித்துகொள்ள முடியாத சிறுவன் இறுதியில் நண்பன் ஒருவனிடம் தனக்கு நடந்த கொடூரங்களை பகிர்ந்துள்ளான். அந்த நண்பன் சமூக சேவகர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சிறுவனை அணுகிய சமூக சேவகர்கள் சம்பவம் தொடர்பாக பொலிசில் புகார் கொடுத்துள்ளனர். இதனையடுத்து நடத்தப்பட்ட சோதனையில் சிறுவன் பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனின் வாக்குமூலத்தின் படி வழக்கு பதிவு செய்த பொலிசார் 15 பேரில் 7 பேரை கைது செய்துள்ளனர். மற்றவர்களை கைது செய்ய தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.