மதிப்பெண் குறைவாக எடுத்த காரணத்தால் சக மாணவர்கள் மத்தியில் ஆடைகளை கழற்றி நிற்கச் சொன்ன ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கி பகுதியில் தனியார் மேல்நிலைப்பள்ளி உள்ளது, இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பில் படிக்கும் 2 மாணவிகள் ஆங்கில பாடத்தில் மதிப்பெண்களை குறைவாக எடுத்துள்ளனர்.
இதனால் ஆடைகளை கழற்றிவிட்டு வகுப்பறையில் நிற்க வேண்டும் என தண்டனை வழங்கியுள்ளார் ஆங்கில ஆசிரியை.
இதனால் மனமுடைந்த மாணவிகள் பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். ஆத்திரமடைந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட ஆசிரியையைக் கைதுசெய்து, பெண்களை பொது இடத்தில் அவமானப்படுத்திய குற்றத்திற்கான சட்டம் 509-ன் கீழ் கைது செய்துள்ளனர்.