கேரளாவில் தாலி கட்டிய பின்னர் மணமகள் தனது காதலனுடன் சென்றுவிட்ட காரணத்தால் கேக் வெட்டி தனது சந்தோஷத்தை கொண்டாடியுள்ளார்.
மணமக்களுக்கு திருமணம் முடிந்தவுடன் கோவிலை சுற்றிவந்தபோது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் மணமகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.
அப்போது, தாலியை கழற்றிய மணமகள், இவர் தான் எனது காதலர், இவரை திருமணம் செய்ய என் வீட்டில் ஒப்புதல் தரவில்லை, எனவே தான் திருமணம் வரை காத்திருந்தேன்.
இனிமேல் என்னை யாரும் தடுக்க முடியாது என்று கூறி விட்டு அந்த இளைஞருடன் புறப்பட்டு சென்று விட்டார்.
இதனால் இரு குடும்பத்தாருக்கும் தகராறு ஏற்பட்டது, இதனைத் தொடர்ந்து மணமகள் குடும்பத்தினர் 8 லட்சம் கொடுப்பதாக கூறியதைத்தொடர்ந்து மணமகன் வீட்டினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுதொடர்பான செய்தி வெளியாகி சமூகவலைதளங்களில் விவாதமாக மாறியது, இந்நிலையில் வீட்டுக்கு சென்ற மணமகன் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த கேக்கை வெட்டி கொண்டாடியுள்ளனர்.
இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டு அசத்தியுள்ளார்.