சிறையில் டிடிவி தினகரனிடம் கதறிய சசிகலா

Report Print Raju Raju in இந்தியா
325Shares

சிறையில் சசிகலாவை சந்திக்க சென்ற டிடிவி தினகரனிடம் சிறை நெருக்கடிகளை சமாளிக்க முடியவில்லை என சசிகலா கண்ணீருடன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலாவை காண தினகரன் சென்றுள்ளார்.

சிறையில் நடக்கும் விபரங்களை கண்ணீருடன் சசிகலா தினகரனிடம் விவரிக்க அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகளை தினகரன் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், சசிகலா சிறையில் நலமாக இருப்பதாக கூறியுள்ளார்.

தினகரன் சசிகலாவை சந்தித்தது குறித்து சிறை துறை வட்டாரங்கள் கூறுகையில், சசிகலாவும் தினகரனும் அரை மணி நேரம் சந்தித்துப் பேசினர்.

ஆனால், அவர்கள் என்ன பேசினார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. தினகரனிடம் பேசும் போது சசிகலா அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டார் என கூறுகிறார்கள்.

விரைவில் சிறையிலிருந்து வெளியில் வர வேண்டும் என்ற எண்ணத்தில் சசிகலா இருப்பதாகவும், சீராய்வு மனுவில் அவருக்கு சாதகமான உத்தரவு நீதிமன்றத்தில் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்