ஜெயலலிதா சிகிச்சை ஆவணங்கள் எங்கே? முதல் முறையாக பேசிய அப்பல்லோ தலைவர்

Report Print Raju Raju in இந்தியா
291Shares

ஜெயலலிதாவுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின் அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளதாகவும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 5ஆம் திகதி மரணமடைந்தார்.

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட வேண்டும் என தகவல் அறியும் சட்டத்தில் பலர் கேட்டார்கள்.

ஆனால், எங்கள் நிறுவனம் அச்சட்ட வரம்பிற்குள் வரவில்லை எனவும் அதனால் விபரங்களை எங்களால் வழங்க இயலாது என்றும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்தது.

ஜெயலலிதா மரணமடைந்து 8 மாதங்கள் கடந்த நிலையில் ஜெயலலிதாவின் சிகிச்சை ஆவணங்கள் பற்றி அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி முதல் முறையாக தற்போது பேசியுள்ளார்.

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும், 75 நாட்களில் 71 நாட்கள் தான் சென்னையில் இருந்ததாகவும், ஜெயலலிதா சிகிச்சை குறித்த அனைத்து ஆவணங்களும் பத்திரமாக உள்ளன என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்