நடிகர் திலீப்புக்கு 3 மனைவிகளா? அம்பலமான தகவல்

Report Print Deepthi Deepthi in இந்தியா
547Shares

நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் குறித்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது, நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டதாக பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆக மொத்தத்தில் நடிகர் திலீப்புக்கு 3 மனைவிகள் என தெரியவந்துள்ளது.

நடிகர் திலீப் - நடிகை மஞ்சு வாரியார் திருமணம், 2015ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இவரும் சட்டப்படி பிரிந்தனர்.

2016ம் ஆண்டு நவம்பரில், நடிகை காவ்யா மாதவனை திலீப் திருமணம் செய்து கொண்டார்.

மஞ்சு வாரியரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர், தனது உறவுக்கார பெண்ணை, திலீப்பின் சொந்த ஊரான ஆலுவாவில் உள்ள தேசம் என்ற இடத்தில் உள்ள பத்திர பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த ஆவணங்களை பெற பொலிசார் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்