சடலமாக மீட்கப்பட்ட மாணவிகள்: சிக்கியது மரண வாக்குமூலம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
289Shares

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இரண்டு பள்ளி மாணவிகள் மர்மமான முறையில் ரயில் தண்டவாளத்தில் இறந்து கிடந்துள்ளனர்.

சரளப்பட்டியைச் சேர்ந்த ரதிதேவி மற்றும் வைரம்பட்டியைச் சேர்ந்த செல்வி ஆகிய இருவரும் வையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று பள்ளிக்கு சென்ற இவர்கள் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரது உடல்களுடம் ரயில்வே தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாணவிகளின் மரண வாக்குமூலக் கடிதம் ஒன்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். தற்கொலைக்கான காரணமும் காரணமான நபர்கள் குறித்தும் அதில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், தங்கள் பிள்ளைகளின் மரணத்தில் மர்ம இருப்பதாகவும், தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்