பட்டப்பகலில் பெண்ணுக்கு நடந்த கொடூரம்: பொலிஸ் வலையில் சிக்கிய இளைஞன்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் இளம்பெண் ஒருவரை பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை 3 நாட்களுக்கு பின்னர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் கடந்த வியாழனன்று ரியா கவுதம் என்ற இளம்பெண் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார். இவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தினார்.

பட்டப்பகலில், பொதுமக்கள் நடமாடும் தெருவில் நடந்த இந்த கொடூர சம்பவம், அங்குள்ள சி.சி.டி.வி கமெராவில் பதிவானது. இதன் காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதையடுத்து காவல்துறையினர் சிறப்பு குழு அமைத்து தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் கொடூர கொலைக்கு பிறகும், டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படாமல் இருப்பது கேள்விக்குறியானது.

இந்நிலையில் இளம்பெண்ணை கொலை செய்த இளைஞர் குறித்து துப்புக் கிடைத்த நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு பின்னர் மும்பையில் வைத்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவருக்கு உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்த ஆதில்(23) என்ற இளைஞர் மீது ஏற்கெனவே கார்திருட்டு வழக்கு இருப்பதாக பொலிஸ் தரப்பில் கூறப்படுகிறது.

இதனிடையே, ஆதில் ஒருவருட காலமாகவே தங்கள் மகளை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாக, ரியா கவுதமின் பெற்றோர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments