விமான நிலையத்தில் வெடித்துச் சிதறியது பேருந்து கண்ணாடி: நடந்தது என்ன?

Report Print Arbin Arbin in இந்தியா

இந்திய தலைநகர் டெல்லியில் ஸ்பைஸ் ஜெட் விமானம் விட்ட புகையால் பயணிகள் பயணித்த பேருந்து ஒன்று கண்ணாடிகள் உடைந்து 5 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் பேருந்து கண்ணாடி உடைந்து சிதறியதில் அதில் பயணித்த 5 பயணிகள் லேசான காயம் அடைந்தனர்.

டெல்லி விமான நிலையத்தில் புறப்படத் தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் ஏற அவ்விடத்திற்கு பயணிகள் பேருந்து மூலம் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பேருந்தை ஒட்டியிருந்த ரன்வேயில் ஸ்பைஸ்ஜெட் விமானம் வேகமாக சென்றது. அப்போது ஸ்பைஸ் ஜெட் விமானம் ஜெட் பிளாஸ்ட் செய்துள்ளது.

ஜெட் பிளாஸ்ட் என்பது விமானத்தில் இருந்து அதிகப்படியான புகையை வெளியேற்றுவது. இந்த ஜெட் பிளாஸ்ட் பெரும்பாலும் விமானம் டேக் ஆப் ஆகும் போது செய்யப்படும்.

இதனால் இண்டிகோ விமானத்திற்கு பயணிகள் பயணித்த பஸ் கண்ணாடி நொறுங்கியது. இதனால் பயணிகள் 5 பேர் காயமடைந்தனர். காயம் அடைந்த பயணிகளுக்கு உடனடியாக விமான நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இச்சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments