பெண்கள் போராடுவது பேஷனாகிவிட்டது: முதல்வரின் அநாகரிகமான பேச்சு

Report Print Santhan in இந்தியா

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெண்கள் போராடுவது பேஷனாகிவிட்டது என்று கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடைபெற்றது.

இதில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மதுக்கடைகளுக்கு எதிராக பெண்கள் போராடுவது பேஷனாகிவிட்டது. இந்த போராட்டங்கள் தேவையற்றவை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில், ஒரு மாநிலத்தின் முதல்வர் இப்படி பேசலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

பெண்களின் இப்போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் முதல்வர் பேசியுள்ளார் என்றும், ஒரு பெண்ணை முன்னிறுத்தி அரசியல் கட்சி செய்து வரும் இவர் இப்படி பேசலமா? அப்படி என்றால் அவர்கள் கட்சியின் தலைவியாக இருந்த ஜெயலலிதா நடத்திய போராட்டகள் பேஷனுக்காகவா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments